1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (11:44 IST)

அசாம் யானைகளை திரும்ப தர மாட்டோம்! – தமிழக அரசு விடாபிடி!

கோவில் யானை துன்புறுத்தப்பட்ட வழக்கில் அசாம் யானைகளை திரும்ப தரப்போவதில்லை என தமிழக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கோவில்கள் பலவற்றில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளில் 9 யானைகள் அசாம் வனத்துறையிடமிருந்து பெறப்பட்டு வளர்க்கப்படுபவை ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை அடித்து துன்புறுத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அசாம் மாநில வனத்துறை தமிழகத்திற்கு வழங்கிய யானைகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. அசாம் அரசு சார்பில் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


ஆனால் தமிழ்நாட்டில் யானைகள் நல்ல முறையிலேயே பராமரிக்கப்பட்டு வருவதாகவும், யானைகளை திரும்ப தர கூடாது எனவும் மயிலாடுதுறையை சேர்ந்த தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணையில் பதில் அளித்த தமிழக அரசு யானைகளை முறையாக பராமரிப்பதாக உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.