தொடர்புடைய செய்திகள்
- 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்
- ஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்
- கிறிஸ்துவர்கள் அந்நியர்கள்: பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து!
- இதை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது ஏன்...?
- அவசர அவசரமாக நிலம் கையகப்படுத்துவது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி!
ராமரே இருந்திருந்தாலும் பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
ராமரால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது என பாஜக எம்.எல்.ஏ கூறியது சர்ச்சையாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வடமாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகிவிட்டது.
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், இதுகுறித்து பேசியபோது இந்து கடவுள் ராமர் பூமியில் இருந்தாலும், பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது, எனென்றால் இன்றைய உலகம் அப்படி என்றும் ஒவ்வொருவரையும் நம் சகோதரிகள் என்று கருதினால் தான் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து கடும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
