புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (12:25 IST)

4ஆம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற 10ஆம் வகுப்பு மாணவன்

தெலுங்கானாவில் அரசு விடுதியில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், 4ஆம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கான அரசு விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மானவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த 4 ஆம் வகுப்பு மாணவனுக்கும் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த 10ஆம் வகுப்பு மாணவன், தன்னுடன் சண்டையிட்ட அந்த மாணவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நான்காம் வகுப்பு மாணவன், சம்பவ இடத்திலேயே பலியானான். 
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையை செய்த 10 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.