1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 8th std boy visit tirupathi without informed to his parent

திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை.. 8ஆம் வகுப்பு மாணவனின் விபரீத செயல்..!

திருப்பதி
திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக எட்டாம் வகுப்பு மாணவன் செய்த விபரீதமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹைதராபாத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் சில முறை திருப்பதிக்கு வந்திருந்த நிலையில் மீண்டும் திருப்பதி செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.  இதை பெற்றோரிடம் தெரிவித்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை அடுத்து கடந்த நான்காம் தேதி டியூஷனுக்கு செல்வதாக கூறி பெற்றோருக்கு தெரியாமல் திருப்பதிக்கு ரயில் ஏறிவிட்டார்.
 
அதன் பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் அதன் பின்னர் தான் தன்னிடம் காசு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டுக்கு எப்படி செல்வது என்று யோசித்த நிலையில் தான் அங்கிருந்த பக்தர் ஒருவரிடம் செல்போன் வாங்கி தனது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து போலீசார் அந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து அந்த சிறுவன் கூறிய போது ’பெற்றோரிடம் 15 முறை இங்கு வந்துள்ளேன், மீண்டும் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்ததால் ரயில் ஏறி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
 
தான் சேமித்து வைத்திருந்த ஆயிர ரூபாய் பணத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வீட்டிற்கு தெரியாமல் திருப்பதிக்கு சென்ற எட்டாம் வகுப்பு மாணவன், அதன் பின் தனியாக வந்ததை நினைத்து வருந்திய நிலையில் தான் போலீசார் அவரை கண்டுபிடித்து பெற்றவரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விமானங்கள் நிறுத்தம்.. வங்கதேசம் செல்ல முடியாமல் சென்னையில் தவிக்கும் முதிய தம்பதி..!