திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (11:03 IST)

20 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி

மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அதில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீ அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்டிடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்று தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.