1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (19:38 IST)

ஐஐடி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை: கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

ஐஐடி மாணவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடியில் 26 வயது மாணவர் ஒருவரை முதலாமாண்டு படித்து வருகிறார்
 
இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென விடுதியின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்
 
இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்த போது அவர் கடிதம் எழுதி வைத்து உயிரிழந்ததாக தெரிய வந்தது
 
அந்த கடிதத்தில் நீண்ட நாளாக தான் மன அழுத்தத்திலிருந்து இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகவில்லை என்றும் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது