செவ்வாய், 25 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 மார்ச் 2025 (08:56 IST)

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

toll gate

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் 78 செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சுங்கசாவடிகளில் சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் சுங்க கட்டணம் உயர்த்துவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் உயர்த்தப்படும் சுங்கக்கட்டணம் அளவு ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என கூறப்படுகிறது, மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K