வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (10:41 IST)

பெற்றோர் சண்டையால் மனமுடைந்த மகள் எடுத்த விபரீத முடிவு – அண்ணை, தங்கை பலி !

பெற்றோர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்ததால் மனமுடைந்த மகள் கிணற்றில் விழ, அவரைக் காப்பாற்ற சென்ற அண்ணனும் இறந்துள்ளனர்.

கோவை மதுக்கரை பகுதியில் சேர்ந்த தம்பதிகள் முத்துசுவாமி மற்றும் வேலுமணி. இவர்களுக்கு சித்ரா என்ற மகளும் அருண்குமார் என்ற மகனும் உள்ளனர். விவசாயம் செய்துவரும் முத்துசுவாமி வயல் வேலைகள் தொடர்பாக தனது மனைவியிடம் அடிக்கடி சண்டைப் போட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் மகள் சித்ரா, இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்தாததால் மனமுடைந்த சித்ரா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப்பார்த்த அவரது சகோதரர் அருண்குமார் அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.