1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (07:34 IST)

திருப்பதியில் காலணி அணிந்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விக்னேஷ் சிவன்

vignesh sivan
ஏழுமலையான் கோவில் வளாகத்தில் காலணி அணிந்து சென்ற தவறுக்காக மன்னிப்பு கோருவதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார் 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவங்களில் கலந்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் காலணி அணிந்ததால் அவர்களிடம் விஜிலென்ஸ் துறை விசாரணை நடத்த போவதாக செய்தி வெளியானது
 
இந்த நிலையில் இது தெரியாமல் நடந்த தவறு என்று கூறியுள்ள விக்னேஷ் சிவன், இதற்காக அனுப்பிய மன்னிப்பு கடிதத்தில் திருமணம் நடந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டதாகவும், ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோ ஷூட் நடத்தி அங்கிருந்து வெளியேற முடிவு செய்ததாகவும் அந்த பரபரப்பில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் காலணியுடன் இருந்ததை கவனிக்க தவறியதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.