1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (19:53 IST)

நடிகை நயன்தாரா விசாரணை: தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தகவல்

nayanthara
நடிகை நயன்தாரா மீது விசாரணை நடத்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாரா இன்று அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார் 
 
திருமணமான அடுத்த நாளே அவர் கணவருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்த புகைப்படங்கள் வைரலானது 
 
இந்த நிலையில் நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்
 
சுவாமி தரிசனத்திற்கு  பின்புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது