செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (13:48 IST)

வாங்காத கடனை கேட்டு அட்டூழியம்.. 3 பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டதால் அதிர்ச்சி..!

Mobile
வாங்காத கடனை கேட்டு ஆன்லைனில் மூன்று பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைனில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் பெண்களாக இருந்தால் மார்பிங் செய்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு அச்சுறுத்தி பணத்தை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மும்பையில் கடனே வாங்காத மூன்று பெண்களிடம் கடனை உடனே திருப்பி செலுத்தும் படி ஆன்லைன் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் மிரட்டியதாகவும் பணத்தை செலுத்தாவிட்டால் ஆபாச புகைப்படங்களை பலருக்கும் பகிர்வோம் என்று சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு மணி நேரத்தில் பல்வேறு நபர்களிடம் இருந்து 24 முறை ஃபோன் செய்து மிரட்டப்பட்டதாகவும் நான் அவர்களிடம் கடனை வாங்கவில்லை எனவே பணத்தை செலுத்த முடியாது என்று கூறியதாகவும் உடனே மார்பிங்  செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை எனது நண்பர்கள் மற்றும் உறவினருக்கு அனுப்பி என்னை சித்திரவதை செய்ததாகவும் அந்த பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளார் 
 
இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதே போன்று நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைனில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் இளம் பெண்களை மிரட்டி பணத்தை கறந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran