1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (18:31 IST)

அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்..! பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

Muruganantham
வாழ்நாள் முழுக்க நீதிமன்றத்திற்கு அலைய வைத்து விடுவேன் என மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
பல்வேறு இடங்களில் வேட்பாளர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 
 
அப்பொழுது அங்கு வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தின் காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  வாழ்நாள் முழுக்க நீதிமன்றத்துக்கு அலைய வச்சு விடுவேன்' என முருகானந்தம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் குன்னத்தூர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.