புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (09:17 IST)

இடிந்து விழுந்த கிணற்றின் சுவர் சறுக்கி விழுந்த 40 பேர்: மபி.யில் பரபரப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றின் சுவர் இடிந்து அங்கிருந்த 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்க கிராம் மக்கள் ஈடுப்பட்டனர். இதனை வேடிக்கை பார்க்கவும் பலர் அந்த கிணற்றை சுற்றி குழுமியுள்ளனர். அப்போது கிணற்றின் சுவர் இடிந்து அதனை சிற்றி நின்றுக்கொண்டிருந்த 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். 
 
இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டு காவல் துறையினரும் தீயணைப்பு துறையினரும் விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கிணற்றுக்குள் சிக்கியியுள்ள 20க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.