பீஸ் கட்ட முடியலைனா செத்து போங்க..! – அமைச்சர் பதிலால் மக்கள் அதிர்ச்சி!
மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளிக்க சென்றபோது அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகள் முழு கட்டணம் வசூலிக்க கூடாது என கட்டணம் வசூலிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல மத்திய பிரதேசத்திலும் கல்வி கட்டணம் குறித்த கட்டுப்பாடுகள் இருந்தாலும் பல பள்ளிகள் முழு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். அப்போது “இவ்வளவு கட்டணம் கட்ட சொன்னால் நாங்கள் என்ன செய்வது.. சாவதா?” என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் “உங்களுக்கு விருப்பமானால் செத்து போங்கள்” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.