1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 ஜூன் 2021 (12:42 IST)

கொரோனாவுக்கு மாத்திரை அளித்த மர்ம நபர்கள்: 3 பேர் பலி

கொரோனாவுக்கு குணமாகும் என்று கூறி மர்ம நபர்கள் அளித்த மாத்திரையை சாப்பிட்ட 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே கொரோனாவுக்கு மருந்து எனக் கூறி மர்ம நபர் அளித்த மாத்திரையை மூன்று பேர் சாப்பிட்டு உள்ளதை அடுத்து அவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் பெருமாள் மலையில் மாத்திரை கொடுத்த மூன்று பேரை கொலை செய்த வழக்கில் 2 பேர் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இன்னும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர் 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மாத்திரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவுக்கு மாத்திரை என்று கூறி யாராவது கொடுத்தால் அதனை சாப்பிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது