கலக்கும் BSNL.. கலங்கி போன மத்த நெட்வொர்க்ஸ்! 25 லட்சம் சிம் கார்டுகள் விற்பனை!
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில நாட்களில் 25 லட்சம் பிஎஸ்என்எல் சிம்கார்டுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் சேவை கட்டணங்களை உயர்த்தியது என்பதும் ஆரம்ப கட்டணமே ரூபாய் 199 என நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற சேவை கட்டணங்களும் உயர்ந்த நிலையில் கிட்டத்தட்ட இந்தியாவில் 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடியாக குறைந்த கட்டணமாக மாதம் ரூபாய் 108க்கு சிம்கார்டு விற்பனை செய்து வரும் நிலையில் அந்த சிம்கார்டுகளை பலர் வாங்கி வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே கடந்த வாரம் இரண்டு லட்சம் பேர் பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கி உள்ள நிலையில் இந்த வாரம் புதிதாக 25 லட்சம் பேர் பிஎஸ்என்எல் சிம்கார்டு வாங்கி உள்ளதாகவும், தங்களது முந்தைய தனியார் தொலைதொடர்பு சேவையை துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் விரைவில் 5ஜி சேவையையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை இழந்து வரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை கட்டணத்தை குறைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் இல்லையெனில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran