1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (10:05 IST)

கொடி பறக்குற நேரம்! தவேக கொடி விரைவில்! இந்த கலர்லதான் இருக்குமாம்..? - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

Thamizhaga Vetri Kazhagam

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள விஜய், பல ஆண்டுகளாகவே தனது அரசியல் பயணத்திற்காக மெல்ல காய் நகர்த்தி வந்தார். சமீப காலமாக மேடைகளில் வெளிப்படையாகவே பல அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி வந்த நடிகர் விஜய், சமீபத்தில் அவரது கட்சி பெயரையும், தான் அரசியலில் அதிகாரப்பூர்வமாக இறங்குவதையும் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் கட்சியினர் பல பகுதிகளிலும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை கட்சிக்கு அதிகாரப்பூர்வ கொடி வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. நேற்று த.வே.க கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுடன் பேசிய அவர் விரைவில் கொடி வெளியிடப்பட உள்ளதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் நற்பணி இயக்க கொடியில் நீலம், சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. நீலம் அதில் பிரதான நிறமாக இருந்தது. இந்நிலையில் த.வே.கவின் புதிய கட்சி கொடியும் நீலம், சிவப்பு வண்ணங்களை பிரதானமாக கொண்டிருக்கும் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி இந்த வண்ணங்களை கொண்டதுதான். அதனால் கூடுதலாக கொடியில் மஞ்சள் வண்ணம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K