நாளுக்கு நாள் பூமி வெப்பமடைதல் தீவிரமாகி வரும் நிலையில் கடந்த 100 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக 2024ம் ஆண்டை அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
வாகன புழக்கம் அதிகரிப்பு, சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக நாளுக்கு நாள் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் விளைவுகளை உலக நாடுகள் பலவும் எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் கோடைக்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை மீறிய வெயில் வாட்டி எடுத்தது.
இந்நிலையில் கடந்த 1901 தொடங்கு தற்போது வரை 124 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக 2024ம் ஆண்டு அமைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் காலங்களிலும் வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் இந்த 2025ம் ஆண்டும் கூட அதிக வெப்பமான ஆண்டாக அமைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
Edit by Prasanth.K