பூண்டு திருட்டு....வயல்வெளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய விவசாயிகள்
மத்திய பிரதேசத்தில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பூண்டு விலை உயர்ந்துள்ளதால், விவசாய நிலத்தில் பூண்டு திருட்டு அதிகரித்துள்ளது. இதை தடுக்க விவசாயிகள் சிசிடிவி கேமராக்கள் நிறுவியுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பூண்டு ஒரு கிலோ ரூ. 400 கிலோ முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையுயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் சிலர் வயல்வெளிகளில் உள்ள பூண்டை திருடிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். இதைத் தடுக்க, சிந்த்வாரா பகுதியில் உள்ள வயல்வெளிகளில் விவசாயிகள் சிசிடிவி கேமராக்களை நிறுவி கண்காணிக்கின்றனர்.
இதுகுறித்து ஒரு விவசாயி கூறியதாவது: 4 ஏக்கரில் பயிடப்பட்டுள்ள பூண்டுகளை காண்காணிக்க 3 சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் சில விவசாயிகள் வாடகை சிசிடிவி கேமராக்களை வாங்கி நிறுவியுள்ளனர்.