வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (19:28 IST)

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்.. நாடு எங்கே போகிறது?

நான்கு வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரில் நடைபெற்ற நிலையில் நாடு எங்கே போகிறது என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகமாகி வருகிறது என்றும் இதனை கட்டுப்படுத்த போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் குற்றங்கள் குறையவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஆபாச படத்தை பார்த்து 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த சிறுமி இரத்தம் வடிய வீட்டுக்கு அழுது கொண்டே வந்தபோதுதான் உண்மை தெரிய வந்தது என்றும் சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தபோது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது 12வது சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இது குறித்து விசாரணை அதிகாரி கூறிய போது சிறுவனை பிடித்து விசாரித்த போது ஆபாச படங்களை பார்த்து அதன் பின்னர் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளான் என்றும் இதனை அடுத்து அந்த சிறுவனை சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran