1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (15:07 IST)

போலீஸை அரிவாளால் வெட்டிய ரவுடிகள்: திருச்சியில் பரபரப்பு..!

attack
திருச்சியில் போலீஸை அரிவாளால் வெட்டிய இரண்டு ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். 
 
அப்போது திடீரென ரவுடிகள் இருவரும் தப்பிக்க முயற்சி செய்தபோது அவர்களை காவலர் சிற்றரசு என்பவர் தடுக்க முயற்சித்தார். அப்போது ரவுடிகள் இருவரும் அவரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்தனர்.
 
அப்போது காவல்துறையினர் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டுகள் ரவுடிகளின் கை கால்களில் பட்டுள்ள நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
திருச்சியில் பட்டப்பகலில் போலீஸ் ஒருவரை ரவுடிகள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran