புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (10:19 IST)

என்னை எப்போதும் சிறுமி போல் நடத்திய அன்பு இயக்குனர் - நடிகை மீனா பெருமிதம்!

மறைந்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் கலாஞ்சலியில் நடிகை மீனா!
 
மறைந்த பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் கலாதபஸ்வி கே.விஸ்வநாத் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நடிகை மீனா கலந்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,  கலாதபஸ்வி கே.விஸ்வநாத் அவர்களின் கலாஞ்சலி என குறிப்பிட்டு, 
 
எந்தவொரு நடிகரின் கனவும் தங்கள் சினிமா வாழ்க்கையில் ஒருமுறையாவது பழம்பெரும் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான். சிறிவெண்ணெலாவில் குழந்தை கலைஞனாக பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
சீதாராமையாகரிமாநவரலு படத்தில் என்னை கதாநாயகியாக பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து ஆசி வழங்கினார். விஸ்வந்த் காரு ஒரு பொறுமையான மனிதர், கலை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் மற்றும் ஒரு முழுமையான நடிகர். படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் அவரே நடிப்பது வழக்கம். அ
 
அவர் எப்போதும் என்னை ஒரு சிறுமியைப் போல, ஒரு மகளைப் போல நடத்தினார். அவர் எப்போதும் நம் இதயங்களிலும் எண்ணங்களிலும் வாழ்வார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அங்கிள் என கூறியுள்ளார்.