புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (21:25 IST)

10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்: அதிர்ச்சியில் பாஜக

முற்பட்ட வகுப்பினர்களின் வாக்குகளை கவர சமீபத்தில் மத்திய பாஜக அரசு 10% இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும், இதன் பெருமை எல்லாம் பாஜகவுக்கே சென்றதால் பெரும்பாலான முற்போக்கு வகுப்பினர்களின் வாக்குகள் பாஜகவுக்கே செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஒரு அதிரடி திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு மட்டும்தான் இந்த 10% இட ஒதுக்கீடு பொருந்தும். அதற்கு பதில் அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திவிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீடே தேவைப்படாது. அந்த வகையில் ஏழையாய் இருப்பவர்கள், நலிந்த விவசாயிகள்,  நடுத்தர மக்கள் ஆகியோர்களின் வருமானத்தை உயர்த்திவிட்டால் அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பட்டியலில் வர மாட்டார்கள்

இதன்மூலம் முற்பட்ட வகுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, 10% இட ஒதுக்கீடும் அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலையும் ஏற்படுவதால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை காங்கிரஸ் அடித்துள்ளது. காங்கிரஸின் இந்த பதிலடி திட்டத்தால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.