1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (18:23 IST)

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகளை மாற்ற திட்டம்

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகளை வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த் முன்னணி டிஜிட்டர் பணப்பரிவர்த்தனை  நிறுவனம் பேடிஎம்.  குறுகிய காலத்தில்  இந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர் உள்ளனர்.
சமீப காலமாக பேடிம் பேமண்ட் வங்கியில் சிக்கல்கள் அதிகரித்து வரும்  நிலையில், ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகளை வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அடுத்தவாரம்  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் இந்திய  தேசிய கொடுப்பனவு கழகம் உடன் ஆலோசிக்க  உள்ளதாக தகவல் வெளியாகிறது.