செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (13:46 IST)

சிறுத்தையை அடித்து விரட்டிய 60 வயது முதியவர்; சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி

உத்திரபிரதேச மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையோடு, 60 வயது முதியவர் ஒருவர் தைரியமாக சண்டையிட்டு ஓட வைத்துள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உத்தரபிரதேசத்தில் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று திடீரென்று புகுந்தது. கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கிய அந்த சிறுத்தை, 60 வயது முதியவரை தாக்க முயன்றுள்ளது. ஆனால் அவரோ அந்த சிறுத்தையை அசால்டாக எதிர்த்து சண்டை போட்டுள்ளார். சிறுத்தை இவரை கீழே தள்ளியபோதும், விடாமல் அந்த சிறுத்தையை அடக்கியுள்ளார். இறுதியில் சிறுத்தை அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் சென்று மறைந்துவிட்டது. சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி பார்ப்பவர்கள் மனதை பதற வைக்கிறது.