திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Siva
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (13:24 IST)

இந்த வாரமும் ஆண் போட்டியாளர் எலிமினேஷன்.. குக் வித் கோமாளியில் இன்னும் ஒரே ஒருவர் தான்..!

cooku1
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே மூன்று ஆண் போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரமும் ஆண் போட்டியாளர் ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட்டார் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது ஒரே ஒரு ஆண் போட்டியாளர் மட்டுமே உள்ளார். 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர், மைம் கோபி, ஆகிய பத்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இவர்களில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகிய மூன்று போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டனர்
 
இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் ஷிவாங்கி மற்றும் விஜே விஷால் கலந்து கொண்ட நிலையில் விஜே விஷால் எலிமினேஷன் செய்யப்பட்டதாக செஃப் தாமு அறிவித்தார். இதனை அடுத்து இன்னும் மைம் கோபி என்ற ஒரே ஒரு ஆண் போட்டியாளர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் உள்ளார் என்பதும் மீதி உள்ள அனைவருமே பெண் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva