1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (21:23 IST)

’குக் வித் கோமாளி’யில் இருந்து விலகுகிறாரா குரேஷி? அவரே அளித்த விளக்கம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே மணிமேகலை விலகி விட்ட நிலையில் தற்போது குரேஷியும் விலக இருப்பதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். 
 
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் நான்கு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் பாலா இல்லாதது பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் சிவாங்கி குக் ஆகிவிட்ட நிலையில் மணிமேகலையும் திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில் குரேஷியம் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்துள்ள குரேஷி ‘காமெடி பண்ணாமல் சாக மாட்டேன், குக் வித் கோமாளியை விட்டு விலக மாட்டேன், தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷி விலகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva