1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (17:46 IST)

நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சு மேல வந்தவன்: பத்து தல டீசர்.,.!

pathu thala
சிம்பு நடித்த பத்துதல என்ற திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்களின் அட்டகாசமான ஆக்சன் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சிம்பு ’நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சு மேல வந்தவன், என்னால எத்தனை பேர் செத்தான்னும் தெரியாது எத்தனை பேரு வாழ்ந்தான்னும் தெரியாது’ என்ற வசனம் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. 
 
சிம்பு இந்த படத்தில் ஒரு மண் கடத்தல் மாஃபியா கூட்டத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார் என்பது டீசரையிலிருந்து பெரியவருகிறது. 
 
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் பின்னணி இசை பட்டையை கிளப்பும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மொத்தத்தில் இந்த டீசர் சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
Edited by Siva