வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (18:44 IST)

முன்பதிவில் கொட்டும் கோடிகள்... கிடுகிடுன்னு கல்லா கட்டும் பொன்னியின் செல்வன் 2!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி( நாளை)  வெளியாகிறது. 
 
இப்படத்தில் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, பொன்னியின் செல்வன் 2 முன்பதிவு மூலம் அடுத்த மூன்று நாட்களுக்கு உலகளாவிய அளவில் ரூ.11 கோடி வசூல் ஈட்டியுள்ளது. அதே போல் 
தமிழகத்தில் ரூ.6 கோடி வசூலாகி உள்ளதாம். இதுவே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ரூ. 1000 கோடி வசூல் இலக்குடன் இப்படக்குழு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.