திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:10 IST)

இன்று சி எஸ் கே போட்டியின் தமிழ் வர்ணனையில் பொன்னியின் செல்வன் குழு!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன்கள் நடந்து வரும் நிலையில், படத்துக்கு ஒரு ப்ரமோஷனாக, இன்று சி எஸ் கே போட்டி நடக்கும் நிலையில், தமிழ் வர்ணனையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் கலந்துகொண்டு படம் பற்றியும் கிரிக்கெட் பற்றியும் உரையாற்றுகின்றனர். இது சம்மந்தமான ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.