குந்தவையை தேடி சென்று ஆபத்தில் மாட்டிக்கொண்ட வந்தியத்தேவன் - பொன்னியின் செல்வன் Sneak Peek வீடியோ!
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அதில் படத்தில் நடித்த கலைஞர்கள் இப்போது படத்தின் ப்ரமோஷன்களில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்ய தற்போது படத்தில் இடம் பெறவுள்ள காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் குந்தவையை காண செல்லும் வந்தியத்தேவன் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளால் கடத்தப்பட்டு அடிபட்டு காளி கோவிலில் கட்டப்பட்டு கிடக்கிறார். அப்போது மறுவேடம்போடு வந்த ஆழ்வார்கடியான் நம்பி அவரை காப்பாற்றுகிறார். இதோ அந்த வீடியோ: