1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:00 IST)

நவம்பரில் கமல்ஹாசனின் அடுத்த பட ஷூட்டிங்… இயக்குனர் இவரா?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.

இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், கமல்ஹாசனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.