1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. Biggboss Shivani narayan next movie

பிக்பாஸ் ஷிவானியின் அடுத்த பட அறிவிப்பு: ஹீரோ யார் தெரியுமா?

ஷிவானி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ஏற்கனவே கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திலும் ஷிவானி நாராயணன் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் செல்வகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் பம்பர் என்ற திரைப்படத்திலும் ஷிவானி நாராயணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 
 
இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படம் கேரள மாநில லாட்டரி சீட்டான பம்பர் லாட்டரி சீட்டு குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஷிவானி நாராயணனுக்கு கதையின் திருப்புமுனை கேரக்டர் வழங்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தமிழில் ‘தி பேட்மேன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு