புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (13:35 IST)

பிக்பாஸ் பாவனிக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பாவனிக்கு கொரோனா உறுதி செய்துள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வின்னராக ராஜூ தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடம் பிரியங்காவுக்கும், மூன்றாவது இடம் பாவனிக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பாவனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் பாவனி விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்