வாழ்வு கொடுத்த எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையா அஜித்?

வாழ்வு கொடுத்த எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையா அஜித்?
siva| Last Modified ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (07:30 IST)
வாழ்வு கொடுத்த எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையா அஜித்?
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுடைய மறைவிற்குப் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி முதல் சாதாரண ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக திரை உலகில் உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பதும் விஜய் உள்பட சில பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் எஸ்பிபியால் முதல் பட வாய்ப்பை பெற்ற அஜித் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அஜித் எந்த நிகழ்ச்சியிலும் நேரடியாக பங்கேற்க மாட்டார் என்பது உண்மைதான். ஆனால் குறைந்தபட்சம் நயன்தாரா போன்று ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
இது குறித்து அஜித் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது எஸ்பிபி அவர்கள் மறைவு செய்தி கேட்டு அடுத்த நிமிடமே அஜித், எஸ்பிபி சரணுக்கு போன் செய்து தனது இரங்கலை தெரிவித்ததாகவும் அது மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக போன் மூலம் பேசி ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தனர்.

மறைந்த ஒருவரின் வீட்டில் உள்ளவர்களுக்கு இரங்கல் கூறியதை அவர் விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்றும் கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு இரங்கல் தெரிவித்ததாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் நட்சத்திரங்கள் மத்தியில் அஜித் வித்தியாசமானவர் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதில் மேலும் படிக்கவும் :