மறைந்த எஸ்.பிபிக்கு பதிலாக உயிருடன் உள்ளவருக்கு இரங்கல் தெரிவித்த செல்லூர் ராஜூ
மறைந்த எஸ்.,பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று பாடகர் எஸ்பிபி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மறைந்த எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.