இரவின் பாடல்
சூரியனின் கீழ் நகரும் பகல் பொழுதை வேலை, பரபரப்பு, கடமை, சக மனிதர்கள் என பலதும் பங்குப் போட்டுக் கொண்டாலும் இரவை இப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் கே.வி.மகாதேவனும், எம்.ஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும்தான். இரவில் நமது துயிலை கலைப்பதற்கென்றே நூறு நூறு பாடல்களை புனைந்து வைத்திருக்கிறார்கள் இவர்கள்.
இரவில் மனிதனின் நுண்ணிய உணர்வுகள் நட்சத்திரங்களைப் போல விழித்துக் கொள்கின்றன. காதலின் பிரிவுத்துயர் நிலவையொத்த பிரகாசம் கொள்கிறது. அந்த ஒளியின் மடியில் புலம்பாத கலைஞனில்லை, அரற்றாத மனிதனில்லை. பாப்லோ நெரூடா பிரிவின் துயரை தனது கவிதை வரிகளில் ஒரு உன்மத்த நிலைக்கு கொண்டு செல்கிறார். துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் என்ற அந்த கவிதையை அறியாத காதலர்கள் சிலியில் இல்லை.
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்.
இரவு உடைந்து சிதற, நீல விண்மீன்கள் தொலைவில்
நடுங்குகின்றன என்பது போன்ற

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது,
அவள் இழப்பை நான் உணரும் போது

காதல் மிகச் சிறியது. மறத்தல் மிக நெடியது
இன்று போன்ற இரவுகளில் அவளை நான்
அணைத்திருந்ததால்
அவள் இழப்பை ஏற்க என் ஆன்மா மறுக்கிறது
இதுவே அவள் எனக்குத் தரும் கடைசித் துன்பமாக
இவையே நான் அவளுக்கு எழுதும்
கடைசி வரிகளாக இருந்தபோதும்.
தனிமைக்கு இரவை தேர்ந்தெடுத்தது யார் என்று தெரியாது. ஆனால் நமக்கு கிடைத்திருப்பது பல அரிய பாடல்கள். பிரிவுத் துயரில் மனிதன் எல்லாவற்றையும் புறக்கணிக்கிறான். இரவும் நிலவும், நட்சத்திரங்களும்தான் அவனது துணை. இரவும் நிலவும் இல்லாத சோகம் ஏது?
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் வெளிவந்த சிறந்தப் பாடல்களில் ஒன்று சுசீலா பாடிய, நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா என்ற உயர்ந்த மனிதன் படப்பாடல். தனிமையான இரவில் கேட்க நேரும் போதெல்லாம் உள்ளத்தில் சோகத்தின் சுனையை திறந்துவிடும் சக்தி கொண்ட பாடல். மெட்டும், வார்த்தைகளும் இயைந்து நம்மை மோனத்தில் ஆழ்த்துபவை.
நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமைக் கண்டு நின்று போய்விடு...
இந்த வரிகளை கேட்கையில் கண்ணதாசனின், வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை பாடலின் நடுவில் வரும், இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி என்ற வரிகள் நினைவுக்கு வரும். காதல் இயற்கையானது. பிரிவு மனிதன் உருவாக்கியது. அதனால் காதல் கொண்டவர்கள் எப்போதும் இயற்கை சார்ந்தே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் சோகத்தை நிலவுடனும், தென்றலுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். நட்சத்திரங்களை திட்டி மறைந்துப் போகச் சொல்கிறார்கள். இது உயர்ந்த மனிதன் பாடலில் அற்புதமாக வெளிப்பட்டிருப்பதை பாருங்கள்.
காதலி நிலவை நாளை வரச் சொல்கிறாள், தென்றலை நின்று போகும்படி பணிக்கிறாள். பாடலின் தொடக்கத்தில் ஹைபிட்ச்சில் வரும், பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் என்ற வரி. என் தலைவனே இங்கில்லை, அப்புறம் நீயெல்லாம் யார் பார்க்கிறதுக்கு இங்கே வந்தாய் என்ற விரக்தியின்ன் தொனியில் ஆரம்பித்து நாளை தலைவன் வருவான் என்ற நம்பிக்கையில் விரகத்தின் மூடுக்கு செல்கிறது.
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கலைஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்.
இரண்டாவது சரணம் முழுக்க அவளின் காதலின் அலைக்கழிப்பை பற்றிப் பாடுகிறாள்.
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்.
சுசீலாவின் குரலில் எம்.எஸ்.வி-யின் அருமையான மெட்டில் கண்ணதாசனின் வரிகளில் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடலிது. இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள். நீங்கள் இழந்ததன் வலியையும், பெறப்போவதன் நிறைவையும் இந்தப் பாடல் ஒருசேரத் தரும்.
குறிப்பு: பாப்லோ நெரூடாவின் துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் கவிதை காலச்சுவடு வெளியிட்ட ஆ.இரா.வேங்கடாசலபதி மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாப்லோ நெரூடா கவிதைகள் புத்தகத்திலிருந்து எடுத்தது.