1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (12:10 IST)

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. தேர்தல் வரை இப்படிதான் இருக்குமா?

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை பங்குச்சந்தை சரிவில் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தேர்தலுக்குப் பின்னர் தான் பங்குச்சந்தை உச்சத்திற்கு செல்லும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலில் சரிவில் உள்ளது என்பதும் மும்பை பங்குச்சந்தை 227 புள்ளிகள் சரிந்து 72,604 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது

அதே போல் தேசிய பங்குச்சந்தை  46 புள்ளிகள் சரிந்து 22,050 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்ற நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் சரிந்தாலும் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் இப்போது முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Edited by Siva