2 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை கண்ட நிலையில் இன்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பங்குச் சந்தை தேர்தல் முடியும் வரை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தான் நிலையான வர்த்தகம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று பங்குச்சந்தை உயர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 324 புள்ளிகள் உயர்ந்து 72 ஆயிரத்து 335 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 21,911 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்றைய பங்குச் சந்தையில் ஐடிசி , மணப்புரம் கோல்டு, ஸ்டேட் பேங்க் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva