புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (10:52 IST)

திடீரென 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த பங்குச்சந்தை.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

பங்குச்சந்தை நேற்று காலை சரிவுடன் தொடங்கினாலும் மாலையில் முடியும்போது ஓரளவு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் இருக்கும் நிலையில் தற்போது 560 புள்ளிகள் சரிந்து 72,160 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 197 புள்ளிகள் சரிந்து 21,827 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தேர்தல் நெருங்க நெருங்க பங்குச்சந்தை உயரும் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று கோல்ட் பீஸ் தவிர கிட்டத்தட்ட எல்லா நிறுவனத்தின் பங்குகளும் மிக மோசமாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 
Edited by Siva