2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்றும் சுமார் 400 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து இரண்டே நாள்களில் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 409 புள்ளிகள் உயர்ந்து 66 ஆயிரத்து 85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 19,785 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva