1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty status

தீபாவளிக்கு மறுநாள் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

பங்குச்சந்தை
தீபாவளி வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று தீபாவளிக்கு மறுநாள் திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 20 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 60 புள்ளிகள் சரிந்து 19,465 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக கணித்து உள்ளனர்

அதே நேரத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் தற்போது முதலீடு செய்ய வேண்டாம் என்றும் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யவும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.



Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.15000.. சத்தீஷ்கர் முதல்வர் அதிரடி அறிவிப்பு..!