1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது என்பதும் சற்றுமுன் 203 புள்ளிகள் அதிகரித்து 80 ஆயிரத்து 878 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதே போல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 655 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசை கைகாட்டுவதா? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்..!