தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!
- பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?
- பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!
நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
நீண்ட நாட்கள் கழித்து நேற்று பங்குச்சந்தை சிறிய அளவில் சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 210 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 1775 என்ற புள்ளிகள் தற்போது வர்த்தகமாகி வருகிறது.
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 371 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று சிறிய அளவில் சரிந்தாலும் இன்று மீண்டும் பங்குச்சந்தை விழுந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், ஹெசிஎல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
