இறங்கிய வேகத்தில் ஏறியது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
தேர்தல் முடிவு காரணமாக நேற்று முன் தினம் படு மோசமாக பங்குச்சந்தை இறங்கிய நிலையில் நேற்று 2000 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதால் இறங்கிய வேகத்தில் மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்து 75,220 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 233 புள்ளிகள் உயர்ந்து 22850 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
வாக்கு எண்ணிக்கை தினத்தில் சுமார் 4000 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் சரிந்த நிலையில் கிட்டத்தட்ட மீண்டும் அதே புள்ளிகள் உயர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய பங்குகள் குறைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
Edited by Siva