தேர்தல் இழுபறியால் வரலாறு காணாத சரிவு.. சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு..!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது
இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை முதல் மிக மோசமாக சரிந்து உள்ளது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4300 பள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து உள்ளது என்றும் நிஃப்டி 1300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளன
இந்த சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran