தொடர்புடைய செய்திகள்
- எக்சிட் போல் முடிவுகள் எதிரொலி: உச்சம் சென்ற அதானி நிறுவனத்தின் பங்குகள்..!
- எக்சிட் போல் எதிரொலி.. ஒரே நாளில் 2100 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!
- மூன்று நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- தொடர் சரிவில் பங்குச்சந்தை.. தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்குமோ?
- இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
தேர்தல் ரிசல்ட் எதிரொலி: பங்குச்சந்தை சென்செக்ஸ் 3200 புள்ளிகள் வீழ்ச்சி..!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக இழுபறியில் உள்ளதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிக்கும் அதிகமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 290 தொகுதிகளில் மட்டுமே கூட்டணியாக முன்னிலையில் உள்ளது
அதுமட்டுமின்றி இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட பாஜக கூட்டணியின் எண்ணிக்கையை நெருங்கி விட்டது என்பது 231 தொகுதிகளில் அந்த கூட்டணி முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
எனவே மத்தியில் ஆட்சி அமைப்பது இழுபறியில் முடிய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் பங்குச்சந்தை இன்று படு மோசமாக சரிந்து உள்ளது. எக்ஸிட் போல் காரணமாக நேற்று பங்குச்சந்தை 2700 புள்ளிகளுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த நிலையில் இன்று 3200 பள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3260 புள்ளிகள் குறைந்து 73 ஆயிரத்து 216 என்ற புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 1010 புள்ளிகள் சரிந்து 22,210 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
