செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (09:47 IST)

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று மும்பையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதை அடுத்து பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 858 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 32 புள்ளிகள் சரிந்து 22,471 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
நாடாளுமன்ற தேர்தல் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் பங்குச் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்றும் பாஜக வெற்றி பெறும் நிலையில் இருந்தால் பங்குச்சந்தை உச்சத்திற்கு செல்லும் என்றும் தோல்வி அடையும் நிலையில் இருந்தால் பங்குச்சந்தை பெரும் அளவு சரியும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், கோடக் மகேந்திரா வங்கி, எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன


Edited by Siva