நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!
நேற்று தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 6,860 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய் 54,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,330 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva