1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதுமே உயர்ந்து வரும் நிலையில் இன்றும் சென்செக்ஸ் சுமார் 80 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 4 31 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 22,590 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
இன்றைய பங்குச்சந்தையில் எச்டிஎப்சி வாங்கி, ஏர்டெல், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மணல் கொள்ளை விவகாரம்: 5 மாவட்ட ஆட்சியர்கள் வாக்குமூலங்களை பதிவு செய்த அமலாக்கத்துறை..!